தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட ருதுராஜ்: சன்ரைசர்ஸ் அணிக்கு 203 ரன்கள் இலக்கு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 202 ரன்கள் குவித்தது. 

News image
Updated On :1 மே 2022, 3:56 pm

DIN

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 202 ரன்கள் குவித்தது. 

ஐபிஎல் போட்டியின் 46ஆவது ஆட்டம் புணேவில் இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணியில் கான்வே, சிம்ரஜித் சிங் ஆகிய இரு வீரர்கள் மாற்று வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். 

ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை நான்கு புறமாக பறக்கவிட்டனர். இருப்பினும் அபாரமாக விளையாடிய ருதுராஜ் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். 57 பந்துகளில் 99 ரன்கள் எடுத்திருந்தபோது ருதுராஜ் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார்.

அடுத்து வந்த கேப்டன் தோனி 8 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தார். இவரது விக்கெட்டையும் நடராஜன் வீழ்த்தினார். சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. கான்வே 85(55 பந்துகள்), ஜடேஜா ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.