காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

வெங்கடேஷ் ஐயர் நீக்கம்: கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு

​ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :2 மே 2022, 1:41 pm


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

கொல்கத்தாவில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அனுகுல் ராய் மற்றும் ஷிவம் மவி களமிறங்குகின்றனர். கொல்கத்தா அணியால் ரூ. 8 கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட வீரர் வெங்கடேஷ் ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணியில் டேரில் மிட்செலுக்குப் பதில் கருண் நாயர் களமிறங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.