3ஆவது வெற்றியை பதிவு செய்யுமா மும்பை?: கொல்கத்தா 165 ரன்கள் குவிப்பு
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடரின் 56ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. நவிமும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத தேர்வு செய்தார்.
கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர், ரஹானே ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் நல்ல துவக்கம் அமைத்து கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 24 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து ரஹானேவும் 25 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
எஞ்சிய பேட்டர்களில் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் மட்டுமே பொறுப்புடன் விளையாடினர். ராணா 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.
மும்பை பௌலிங்கில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...