மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஐபிஎல் போட்டியிலிருந்து ஜடேஜா விலகல்: சிஎஸ்கே அறிவிப்பு

நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

News image
Updated On :11 மே 2022, 4:23 pm

DIN


நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பு கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்தார் மகேந்திர சிங் தோனி. அணிக்கு கேப்டன் பொறுப்பு வகித்த ஜடேஜா முதல் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுத் தந்தார். அவரது ஃபார்மும் கேள்விக்குள்ளானது.

இதையடுத்து, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜடேஜா மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார்.

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான லீக் ஆட்டத்தின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. இதன் காரணமாக நடப்பு சீசன் முழுவதிலும் அவர் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியானது.

இந்தத் தகவலை உறுதி செய்யும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மருத்துவ அறிவுறுத்தலின்பேரில் அவர் விலகுவதாக அணி நிர்வாகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.