இந்த இரண்டையும் நான் செய்வேன்: விமர்சனங்களை எதிர்கொள்வது பற்றி விராட் கோலி

என் வாழ்க்கையை அவர்களால் வாழ முடியாது.
இந்த இரண்டையும் நான் செய்வேன்: விமர்சனங்களை எதிர்கொள்வது பற்றி விராட் கோலி

விமர்சனங்களைக் கண்டுகொள்ள மாட்டேன் என ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டியில் மிக மோசமாக விளையாடி வருகிறார் விராட் கோலி. 12 ஆட்டங்களில் ஒரு அரை சதம் உள்பட 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மூன்று முறை முதல் பந்திலேயே ஆட்டமிழந்துள்ளார். இரு முறை சன்ரைசர்ஸ், ஒருமுறை லக்னெளவுக்கு எதிராக இப்படி டக் அவுட் ஆகியுள்ளார். இந்நிலையில் ஆர்சிபி அணியின் தொகுப்பாளர் மிஸ்டர் நாக்ஸுக்கு அளித்த பேட்டியில், மோசமாக விளையாடும்போது விமர்சனங்களை எதிர்கொள்வது பற்றி கோலி கூறியதாவது:

முதல் பந்து டக் அவுட்கள். என் வாழ்க்கையில் இப்படி ஏற்பட்டதேயில்லை. அதனால் தான் ஆட்டமிழந்த பிறகு நான் புன்னகைத்தேன். நான் எல்லாமும் பார்த்துவிட்டேன் என நினைக்கிறேன். இந்த ஆட்டத்தில் வெளிப்படும் எல்லா அனுபவங்களையும் பெற நீண்ட காலமாகிவிட்டது. 

என்னை விமர்சனம் செய்பவர்கள் என் நிலையில் இருந்து பேச முடியாது. நான் என்ன உணர்கிறேன் எனத் தெரியாது. என் வாழ்க்கையை அவர்களால் வாழ முடியாது. விமர்சனங்களை எப்படித் தடுப்பது எனக் கேட்கிறீர்கள். தொலைக்காட்சியின் ஒலியைக் குறைக்க வேண்டும், அல்லது யார் என்ன சொன்னாலும் அதற்கு மதிப்பளிக்கக் கூடாது. நான் இந்த இரண்டையும் செய்வேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com