முகப்பு விளையாட்டு ஐபிஎல்
ஐபிஎல் போட்டியிலிருந்து ஜடேஜா விலகல்?
By DIN | Published On : 11th May 2022 04:03 PM | Last Updated : 12th May 2022 01:10 PM | அ+அ அ- |

ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2022 போட்டி தொடங்குவதற்கு முன்பு சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகினார். இதையடுத்து ஜடேஜா, சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதால் திடீரென கேப்டன் பதவியிலிருந்து அவர் விலகினார். இந்த நெருக்கடியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் தேர்வானார். அதற்குப் பிறகு சிஎஸ்கே விளையாடிய 3 ஆட்டங்களில் 2-ல் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.
ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது ஜடேஜாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் தில்லிக்கு எதிராக சிஎஸ்கேவின் சமீபத்திய ஆட்டத்தில் காயம் காரணமாக ஜடேஜா விளையாடவில்லை. இந்நிலையில் காயம் குணமாகாததால் ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து ஜடேஜா விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணி மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே பிளேஆஃப்புக்கான போட்டியில் இருக்க முடியும் என்கிற நிலையில் ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ள காயமும் அதனால் அவர் போட்டியிலிருந்து விலக இருப்பதும் சிஎஸ்கே அணிக்குப் பெரிய பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஜடேஜாவின் விலகல் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.