வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மகளிர் டி20 சேலஞ்ச்: அணிகளை அறிவித்தது பிசிசிஐ

ஐபிஎல் போட்டியின் போது நடைபெறும் மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்களில் பங்குபெறும் வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

News image
ஹர்மன்ப்ரீத் கெளர்
Updated On :16 மே 2022, 12:23 pm

DIN


ஐபிஎல் போட்டியின் போது நடைபெறும் மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்களில் பங்குபெறும் வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

மே 23 முதல் மே 28 வரை மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சூப்பர்நோவாஸ், டிரெய்ல்பிளேஸர்ஸ், வெலாசிட்டி என மூன்று அணிகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளை எதிர்த்து ஒருமுறை விளையாடும். அதிகப் புள்ளிகளைக் கொண்ட அணிகள் மே 28 அன்று இறுதிச்சுற்றில் மோதவுள்ளன. 

இப்போட்டிக்கான அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. சூப்பர்நோவாஸ் அணிக்கு ஹர்மன்ப்ரீத் கெளரும் டிரெய்ல்பிளேஸர்ஸ் அணிக்கு மந்தனாவும் வெலாசிட்டி அணிக்கு தீப்தி சர்மாவும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 2020-க்குப் பிறகு இப்போட்டி மீண்டும் நடைபெறவுள்ளது. 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் விளையாடவுள்ளார்கள். சூப்பர்நோவாஸ் அணியில் அலனா கிங், டாட்டின், சோபி, லுஸ் ஆகியோரும் டிரெய்ல்பிளேஸர்ஸ் அணியில் ஹேலீ மேத்யூஸ், சல்மா காதூன், சோபியா டங்க்லி, ஷர்மின் அக்தர் ஆகியோரும் வெலாசிட்டி அணியில் அயபோங்கா காகா, கேட் கிராஸ், லாரா, சந்தம் ஆகியோரும் வெளிநாட்டு வீராங்கனைகளாக இடம்பெற்றுள்ளார்கள். 

தனியா பாட்டியா, மேக்னா சிங், பூஜா வஸ்த்ரகர், பிரியா பூனியா போன்ற வீராங்கனைகள் சூப்பர்நோவாஸ் அணியிலும் பூணம் யாதவ், ஜெமிமா, ராஜேஸ்வரி, ரேணுகா சிங், ரிச்சா கோஷ் போன்ற வீராங்கனைகள் டிரெய்ல்பிளேஸர்ஸ் அணியிலும் ஸ்னேக் ராணா, ஷஃபாலி வர்மா, ராதா யாதவ், யாஸ்திகா போன்ற வீராங்கனைகள் வெலாசிட்டி அணியிலும் இடம்பெற்றுள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.