களைகட்டும் இன்றைய மோதல்: கொல்கத்தா அணியில் கம்மின்ஸ், மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ்

களைகட்டும் இன்றைய மோதல்: கொல்கத்தா அணியில் கம்மின்ஸ், மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ்

மும்பை அணி ஒரு வெற்றியும் இதுவரை இல்லாமல் 8-ம் இடத்தையும் கொல்கத்தா அணி 3 ஆட்டங்களில்...

ஐபிஎல் 2022 புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி ஒரு வெற்றியும் இல்லாமல் 8-ம் இடத்தையும் கொல்கத்தா அணி 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளன. இரு அணிகளும் புணேவில் இன்று மோதுகின்றன. 

ஆஸ்திரேலிய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் முடிந்த பிறகு தான் ஒப்பந்தத்தில் உள்ள ஆஸி. வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியும் என அறிவுறுத்தியிருந்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. பாகிஸ்தானில் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடாத வீரர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்பதால் இதுவரை ஐபிஎல் போட்டியில் (ஒப்பந்தத்தில் உள்ள) ஆஸி. வீரர்கள் யாரும் இடம்பெறாமல் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்று முதல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஆஸி. வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்றைய மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலில் கேகேஆர் அணி சார்பாக பேட் கம்மின்ஸ் விளையாடவுள்ளார். புணே வந்த கம்மின்ஸ், மூன்று நாள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து சாம் பில்லிங்ஸுக்குப் பதிலாக கம்மின்ஸ் விளையாடவுள்ளார். ஏற்கெனவே அதிக விக்கெட்டுகள் எடுத்து முன்னிலையில் உள்ள உமேஷ் யாதவுடன் கம்மின்ஸும் இணைவதால் எதிரணிகளுக்கு கேகேஆர் அணியின் பந்துவீச்சு பெரிய சவாலாக இருக்கப் போகிறது. பில்லிங்ஸ் அணியில் இல்லாததால் விக்கெட் கீப்பராக ஷெல்டன் ஜாக்ஸனுக்கு மீண்டும் இடம்பெறவுள்ளார். 

மும்பை அணியில், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள சூர்யகுமார் யாதவ், அன்மோல்ப்ரீத் சிங்குக்குப் பதிலாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மும்பை அணியின் நடுவரிசை மேலும் பலம்பெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com