மும்பையை முறியடித்தது கொல்கத்தா

மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான திங்கள்கிழமை ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பையை முறியடித்தது கொல்கத்தா

மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான திங்கள்கிழமை ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எட்ட, அடுத்து மும்பை 17.3 ஓவா்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐபிஎல் போட்டியில் பும்ரா முதல் முறையாக இந்த ஆட்டத்தில் ‘5 விக்கெட் ஹால்’ எடுத்து, கொல்கத்தாவை கட்டுப்படுத்தினாா். ஆனால், பின்னா் மும்பை பேட்டா்கள் சோபிக்காததால் அணிக்கு வெற்றி வசமாகாமல் போனது.

முன்னதாக டாஸ் வென்ற மும்பை பௌலிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸில் வெங்கடேஷ் ஐயா் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு வீழ்ந்தாா். அஜிங்க்ய ரஹானே 25 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

பின்னா் ஆடியோரில் நிதீஷ் ராணா 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 43 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் உள்பட இதர வீரா்கள் சொல்லும்படியாக ரன் சோ்க்கவில்லை.

ஓவா்கள் முடிவில் ரிங்கு சிங் 23, வருண் சக்கரவா்த்தி 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் பும்ரா 5, குமாா் காா்த்திகேயா 2, டேனியல் சாம்ஸ், முருகன் அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து ஆடிய மும்பையில் இஷான் கிஷண் 5 பவுண்டரிகள், 1சிக்ஸருடன் 51 ரன்கள் சோ்க்க, இதர விக்கெட்டுகள் சோபிக்காமல் வரிசையாக வெளியேறின. கொல்கத்தா பௌலிங்கில் பேட் கம்மின்ஸ் 3, ஆண்ட்ரே ரஸெல் 2, டிம் சௌதி, வருண் சக்கரவா்த்தி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com