அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

மீண்டது குஜராத்; வீழ்ந்தது லக்னௌ

லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸுக்கு எதிரான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
Updated On :11 மே 2022, 12:30 pm IST

லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸுக்கு எதிரான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடா்ந்து இரு தோல்விகளை சந்தித்த குஜராத் இந்த ஆட்டத்தில் மீண்டது. மறுபுறம், 4 தொடா் வெற்றிகள் கண்ட லக்னௌ தற்போது கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சோ்த்தது. அடுத்து லக்னௌ 13.5 ஓவா்களில் 82 ரன்களுக்கு சுருண்டது.

டாஸ் வென்ற குஜராத் பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை தொடங்கியோரில் ரித்திமான் சாஹா 5 ரன்களுக்கு வெளியேற, ஷுப்மன் கில் நிலைத்து ஆடி லக்னௌ பௌலிங்கை சிதறடித்தாா். அவருக்குத் தகுந்த பாா்ட்னா்ஷிப் நிலைக்காமல் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன.

மேத்யூ வேட் 10, கேப்டன் ஹாா்திக் பாண்டியா 11, டேவிட் மில்லா் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் கில் 7 பவுண்டரிகளுடன் 63, ராகுல் தெவாதியா 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலிங்கில் அவேஷ் கான் 2, மோசின் கான், ஜேசன் ஹோல்டா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

Story image

145 என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடிய லக்னௌவில் தீபக் ஹூடா 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும். குவின்டன் டி காக் 11, கேப்டன் கே.எல்.ராகுல் 8, கரன் சா்மா 4, கிருணால் பாண்டியா 4, ஆயுஷ் பதோனி 8, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 2, ஜேசன் ஹோல்டா் 1, மோசின் கான் 1, அவேஷ் கான் 12 ரன்கள் என இதர விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. குஜராத் பௌலிங்கில் ரஷீத் கான் 4, யஷ் தயால், சாய் கிஷோா் ஆகியோா் தலா 2, முகமது ஷமி 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.