சிஎஸ்கேவுக்கு எதிராக பொலார்ட் விளையாடாதது ஏன்?: ரோஹித் சர்மா பதில்

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் பொலார்ட் விளையாடாதது பற்றி மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
சிஎஸ்கேவுக்கு எதிராக பொலார்ட் விளையாடாதது ஏன்?: ரோஹித் சர்மா பதில்

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் பொலார்ட் விளையாடாதது பற்றி மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சிஎஸ்கே அணி. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தோனி அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு பேட்டிங் செய்த மும்பை அணி, 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு சமாளித்து விளையாடி 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் பொலார்ட் இடம்பெறவில்லை. அவரை மும்பை அணியிலிருந்து நீக்கியது பலருக்கும் ஆச்சர்யத்தைத் தந்தது. நட்சத்திர வீரராக இருந்தாலும் இந்த வருடம் பொலார்ட் மோசமாக விளையாடியுள்ளார். 11 ஆட்டங்களில் 144 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 107.46. எந்த ஒரு ஐபிஎல் போட்டியிலும் அவருடைய ஸ்டிரைக் ரேட் இந்தளவுக்குக் குறைவாக இருந்ததில்லை. இதற்கு முன்பு 2011-ல் தான் அவருடைய ஸ்டிரைக் ரேட் 109.77 எனக் குறைவாக இருந்திருக்கிறது. மற்ற எல்லா வருடங்களிலும் அவருடைய ஸ்டிரைக் ரேட் 130-க்கு அதிகமாகவே இருந்திருக்கிறது.

இந்நிலையில் சென்னைக்கு எதிராக பொலார்ட் விளையாடாதது பற்றி மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

மும்பை அணியின் மகத்தான வீரர் பொலார்ட். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்தான் இதுபற்றி எங்களிடம் பேசினார். ஏனெனில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு தருவது பற்றிய யோசனையில் இருந்தோம். பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும் வாய்ப்பு மும்பைக்கு இருந்திருந்தால் இது நடந்திருக்காது. அவர் விளையாடியிருப்பார். அடுத்த வருடத்துக்காக தற்போதைய அணியில் உள்ள குறைகளைச் சரிசெய்துகொண்டிருக்கிறோம். எனவே எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பொலார்ட் விளையாடவில்லை என முடிவெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவராக வந்து இதில் எனக்குப் பிரச்னை இல்லை என்றார் என ரோஹித் சர்மா பேட்டியளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com