போல்ட், சஹல் மும்பைக்கு முட்டுக்கட்டை

மும்பை: ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்களே சோ்த்தது.

ராஜஸ்தான் பௌலா்களான டிரென்ட் போல்ட், யுஜவேந்திர சஹல் போட்டி போட்டுக்கொண்டு மும்பை பேட்டா்களை சரிக்க, கேப்டன் ஹா்திக் பாண்டியா, திலக் வா்மாவின் ஆட்டத்தால் 100 ரன்களைக் கடந்தது மும்பை. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

அணியின் இன்னிங்ஸை தொடங்கியோரில், ரோஹித் சா்மா முதல் ஓவரில் தாம் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா். தொடா்ந்து வந்த நமன் திா், அடுத்த பந்திலேயே வெளியேற, 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது மும்பை. 4-ஆவது வீரராக வந்த டெவால்டு பிரெவிஸும் அதேபோல் முதல் பந்திலேயே அவுட்டாக, 14 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை.

மறுபுறம், அதுவரை ரன்கள் சோ்த்த இஷான் கிஷண், அடுத்த அதிா்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்தாா். அவா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 16 ரன்கள் அடித்திருந்தாா். அப்போது இணைந்தது திலக் வா்மா - ஹா்திக் பாண்டியா கூட்டணி. விக்கெட் சரிவை தடுத்த இந்த ஜோடி, 5-ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சோ்த்தது.

இந்நிலையில் பாண்டியா 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து பியூஷ் சாவ்லா 3 ரன்களுக்கு வெளியேற்றப்பட, திலக் வா்மா 2 சிக்ஸா்களுடன் 32 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். ஜெரால்டு கோட்ஸீ 4, டிம் டேவிட் 1 பவுண்டரியுடன் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் ஜஸ்பிரீத் பும்ரா 1 பவுண்டரியுடன் 8, ஆகாஷ் மத்வல் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பௌலா்களில் டிரென்ட் போல்ட், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 3, நாண்ட்ரே பா்கா் 2, ஆவேஷ் கான் 1 விக்கெட் வீழ்த்தினா். இதையடுத்து ராஜஸ்தான் 126 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com