நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிஎஸ்கேவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் இதுதான்: வருண் சக்கரவர்த்தி

சிஎஸ்கேவுக்கு எதிரானப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து கேகேஆர் அணியின் வருண் சக்கவர்த்தி பேசியுள்ள்ளார்.

News image

வருண் சக்கரவர்த்தி

படம் | ஐபிஎல்

Updated On :9 ஏப்ரல் 2024, 12:50 pm

DIN

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கவர்த்தி பேசியுள்ள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை தவறாக புரிந்து கொண்டதே தோல்விக்கு காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கவர்த்தி பேசியுள்ள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: போட்டிக்கான ஆடுகளத்தைப் பார்த்தபோது, சமமான ஆடுகளம் போன்று தெரிந்தது. ஆனால், போட்டியின்போது ஆடுகளமானது வித்தியாசமாக இருந்தது. ஆடுகளத்தை கொஞ்சம் நன்றாக மதிப்பிட்டிருக்கலாம். போட்டியின் தொடக்கத்தில் ஆடுகளம் மெதுவாக இருந்தது. பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. 160 ரன்கள் எடுத்திருந்தால் நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். ஆடுகளத்தில் போட்டியின் பிற்பகுதியில் பனிப் பொழிவு இருந்ததால், பந்துவீசுவது கடினமாக இருந்தது என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.