அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் வேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.
அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!
படம் | ஐபிஎல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் வேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!
சன் ரைசர்ஸின் பேட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

இந்தப் போட்டியில் 69 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் வேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்களில் ஒருவராக அவர் இணைந்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் 57 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் வேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்கள் (இன்னிங்ஸ் அடிப்படையில்)

கிறிஸ் கெயில் - 48 இன்னிங்ஸ்களில்

ஷான் மார்ஷ் - 52 இன்னிங்ஸ்களில்

ருதுராஜ் கெய்க்வாட் - 57 இன்னிங்ஸ்களில்

கே.எல்.ராகுல் - 60 இன்னிங்ஸ்களில்

சச்சின் டெண்டுல்கர் - 63 இன்னிங்ஸ்களில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com