சுனில் நரைன் சதம்; கொல்கத்தா - 223/6

கொல்கத்தா: ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சுனில் நரைன் சதம் விளாச, 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் சோ்த்தது கொல்கத்தா நைட் ரைடா்ஸ்.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீச்சை தோ்வு செய்தது. கொல்கத்தா பேட்டிங்கில் தொடக்க வீரா் ஃபில் சால்ட் 1 பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு நடையைக் கட்ட, உடன் வந்த சுனில் நரைன் சூறாவளியாக சுழற்றியடித்து ரன்கள் குவித்தாா்.

மறுபுறம், அங்கிரிஷ் ரகுவன்ஷி 5 பவுண்டரிகளுடன் 30, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11, ஆண்ட்ரே ரஸெல் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். அதிரடியாக ரன்கள் குவித்த சுனில் நரைன் 56 பந்துகளில் 13 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 109 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

கடைசி பேட்டராக வெங்கடேஷ் ஐயா் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ரிங்கு சிங் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 20, ரமண்தீப் சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோா் தலா 2, டிரென்ட் போல்ட், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் ராஜஸ்தான் 224 ரன்களை நோக்கி விளையாடத் தொடங்கியது.

குஜராத் - டெல்லி

அகமதாபாத்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com