12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

கொல்கத்தா அணி 12 வருடங்களுக்குப் பிறகு வான்கடேவில் மும்பையிடம் வெற்றிப் பெற்றுள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வெள்ளிக்கிழமை வென்றது.

முதலில் 19.5 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 169 ரன்களே சோ்த்த கொல்கத்தா, பின்னா் மும்பையை 18.5 ஓவா்களில் 145 ரன்களுக்கு சுருட்டியது. 2012-க்குப் பிறகு மும்பை மண்ணில் இதுவே கொல்கத்தாவின் முதல் வெற்றியாகும்.

கேகேஆர் அணியின் உரிமையாளர் பிரபல நடிகர் ஷாருக்கான். அவரது மகள் சுஹானா கான் இந்த வெற்றிக் குறித்து இன்ஸ்டாகிராமில், “இறுதியாக வென்றுவிட்டோம்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

ஜோயா அக்தர் இயக்கத்தில் ஆர்ச்சிஸ் எனும் இணையத் தொடரில் சுஹானா கானின் நடிப்பு பாராட்டப்பட்டது.

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?
கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

கேகேஆர் அணி வீரர் நிதீஷ் ராணா, “12 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடேவில் வரலாற்று வெற்றி இது. அபாரமான வெற்றி. அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?
கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com