
காயத்திலிருந்து குணமடைந்து உலகக் கோப்பைக்குத் தயாராக இங்கிலாந்து அணியின் லியம் லிவிங்ஸ்டன் தாயகம் திரும்பியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பைத் தொடருக்காகவும் அதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் இருப்பதாலும் ஐபிஎல் தொடர் முடிவடையும் முன்னரே இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் வீரர் லியம் லிவிங்ஸ்டன் டி20 உலகக் கோப்பைக்குத் தயாராவதற்காக தாயகம் திரும்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
லியம் லிவிங்ஸ்டன் மட்டுமல்லாது ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்), வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டாப்ளே (ஆர்சிபி) போன்ற இங்கிலாந்து வீரர்களும் தாயகம் திரும்பியுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்புகின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் வருகிற மே 22 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.