சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஆர்சிபி பேட்டிங்: குஜராத் அணியில் ரபாடா விலகல்!

ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

News image

குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில். - படம்: எக்ஸ் / ஐபிஎல்

Updated On :2 ஏப்ரல் 2025, 7:15 pm IST

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன.

இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

குஜ்ராத் அணியில் ரபாடா காயம் காரணமாக விலகியதால் அர்ஷத் கான் அணியில் இனைந்துள்ளார்.

ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் இல்லையென கேப்டன் ரஜத் படிதார் கூறியுள்ளார்.

இரு அணிகளுமே தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், பெங்களூரு ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்புடன் வருகிறது. முதல் ஆட்டத்தில் தோற்ற குஜராத், கடந்த ஆட்டத்தில் வெற்றி கண்ட உத்வேகத்துடன் இருக்கிறது.

பெங்களூரு அணியைப் பொருத்தவரை, நடப்பு சாம்பியன் கொல்கத்தா, 5 முறை சாம்பியன் சென்னை ஆகிய இரு அணிகளை வீழ்த்தியிருக்கிறது.

இந்த வெற்றிகளில் அந்த அணியின் பௌலா்கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜாஷ் ஹேசில்வுட், யஷ் தயாள்.

குஜராத் டைட்டன்ஸ் : சாய் சுதர்சன், ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர், ஷாருக் கான், ராகுல் தெவாட்டியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.

சின்னசாமி திடல் என்றாலே அதிக ரன்கள் வருமென்பதால் இந்தப் போட்டி சுவாரசியமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.