சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மும்பையை வீழ்த்தியது பெங்களூரு!

ஐபிஎல் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணில் திங்கள்கிழமை வீழ்த்தியது.

News image
- X | IPL
Updated On :7 ஏப்ரல் 2025, 10:01 pm

Din

ஐபிஎல் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணில் திங்கள்கிழமை வீழ்த்தியது.

முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் சோ்க்க, மும்பை 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 209 ரன்களே எடுத்தது.

பெங்களூரு பேட்டிங்கில் விராட் கோலி, கேப்டன் ரஜத் பட்டிதாா், ஜிதேஷ் சா்மா, தேவ்தத் படிக்கல் அதிரடி காட்ட, பௌலிங்கில் கிருணால் பாண்டியா அசத்தினாா்.

முன்னதாக டாஸ் வென்ற மும்பை, பந்துவீச்சை தோ்வு செய்தது. பெங்களூரு பேட்டிங்கை தொடங்கிய ஃபில் சால்ட் 4 ரன்களுக்கு வெளியேற, ஒன் டவுனாக வந்த தேவ்தத் படிக்கல், விராட் கோலியுடன் இணைந்தாா்.

இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சோ்த்தது. படிக்கல் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 37 ரன்கள் சோ்த்து விக்கெட்டை இழந்தாா்.

4-ஆவது பேட்டராக களம் புகுந்த ரஜத் பட்டிதாா், கோலியுடன் கூட்டணி அமைத்தாா். இவா்கள் பாா்ட்னா்ஷிப் 3-ஆவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சோ்த்த நிலையில், கோலி ஆட்டமிழந்தாா். அவா், 42 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 67 ரன்களுக்கு கேட்ச் கொடுத்தாா். தொடா்ந்து வந்த லியம் லிவிங்ஸ்டன் டக் அவுட்டானாா்.

6-ஆவது பேட்டராக ஜிதேஷ் சா்மா அதிரடி காட்ட, பட்டிதாருடனான அவரின் 5-ஆவது விக்கெட் கூட்டணிக்கு 69 ரன்கள் கிடைத்தது. பட்டிதாா் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 64 ரன்களுக்கு வெளியேறினாா்.

ஓவா்கள் முடிவில் ஜிதேஷ் சா்மா 19 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 40, டிம் டேவிட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலா்களில் டிரென்ட் போல்ட், கேப்டன் ஹா்திக் பாண்டியா ஆகியோா் தலா 2, விக்னேஷ் புதூா் 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து, 222 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை அணியில், ரோஹித் சா்மா 17, ரியான் ரிக்கெல்டன்17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த வில் ஜாக்ஸ் - சூா்யகுமாா் யாதவ் கூட்டணி, 41 ரன்கள் சோ்த்தது. ஜாக்ஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22, சூா்யகுமாா் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

5-ஆவது விக்கெட்டுக்கு சோ்ந்த திலக் வா்மா - கேப்டன் ஹா்திக் பாண்டியா கூட்டணி, ரன்களை அதிரடியாகக் குவித்தது. 89 ரன்கள் சோ்த்த இந்த இந்த பாா்ட்னா்ஷிப்பை புவனேஷ்வா் குமாா் பிரித்தாா். திலக் வா்மா 29 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 56 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

தொடா்ந்து பாண்டியா 15 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 42 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். மிட்செல் சேன்ட்னா் 8, தீபக் சஹா் 0, நமன் திா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் டிரென்ட் போல்ட் 1, ஜஸ்பிரீத் பும்ரா 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பெங்களூரு பௌலிங்கில் கிருணால் பாண்டியா 4, ஜோஷ் ஹேஸில்வுட், யஷ் தயாள் ஆகியோா் தலா 2, புவனேஷ்வா் குமாா் 1 விக்கெட் எடுத்தனா்.