
சின்னசாமி திடலில் நேற்றிரவு (ஏப்.10) நடைபெற்ற ஐபிஎல்-இன் 24ஆவது போட்டியில் ஆர்சிபியும் தில்லி கேபிடல்ஸும் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 163/7 ரன்கள் எடுக்க, தில்லி கேபிடல்ஸ் 17.5 ஓவர்களில் 169/4 ரன்கள் எடுத்து வென்றது.
தில்லி அணியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவரது கொண்டாட்டமும் சமூக வலைதளத்தில் வைரலானது.
சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆர்சிபி தோல்வியடைந்துள்ளது.
இது குறித்து ஆர்சிபி அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:
முதலிரண்டு போட்டிகளில் நாங்கள் நல்ல பிட்ச்சுகள் வேண்டுமெனக் கேட்டோம். ஆனால், இப்படி பேட்டிங் ஆடவே கடினமாக இருக்குமாறு தந்துவிட்டார்கள்.
அதனால், எங்களால் என்ன சிறப்பாக செயல்பட முடியுமோ அதைச் செய்தோம். ஆனால், நாங்கள் சின்னசாமி பிட்ச் மேற்பார்வையாளரிடம் இது குறித்து பேசுவோம். அவர் தனது வேலையை சிறப்பாக செய்வாரென நம்புகிறோம்.
இந்த பிட்ச் பேட்டர்களுக்கு அவ்வளவாக உதவவே இல்லை. இது மிகவும் சவாலான பிட்ச். நாங்கள் விளையாடிய 2 போட்டிகளிலும் இதுதான் நிலைமை.
முதல் நான்கு ஓவரிலிருந்து 13ஆவது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். பேட்டிங்கில் நாங்கள் தடுமாறினோம். இருந்தும் ஓரளவுக்கு நல்ல இலக்கை நிர்ணயித்தோம்.
தில்லி அணி 50/4 என இருந்தார்கள். தூரல் வந்தத்தால் தில்லி பேட்டிங்கிற்கு சாதகமானது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.