தில்லி கேபிடல்ஸ் அதிரடி: குஜராத் டைட்டன்ஸுக்கு 204 ரன்கள் இலக்கு!

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 203 ரன்கள் எடுத்துள்ளது.
சிக்ஸர் அடித்த தில்லி கேபிடல்ஸ் அக்‌ஷர் படேல்.
சிக்ஸர் அடித்த தில்லி கேபிடல்ஸ் அக்‌ஷர் படேல். படம்: எக்ஸ் / ஐபிஎல்
Published on
Updated on
1 min read

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 203/8 ரன்கள் எடுத்துள்ளது.

அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தில்லி வீரர்கள் யாருமே அரைசதம் அடிக்காவிட்டாலும் 4 வீரர்கள் 30-க்கும் அதிகமான ரன்களை அடித்து அசத்தினார்கள்.

கடைசி ஓவரில் சாய் கிஷோர் 1 விக்கெட் எடுத்து 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

குஜராத் சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். சிராஜ், அர்ஷத் கான், இஷாந்த் சர்மா, சாய் கிஷோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

தில்லி கேபிடல்ஸ் ஸ்கோர் கார்டு

அபிஷேக் போரெல் - 18

கருண் நாயர் - 31

கே.எல்.ராகுல் - 28

அக்‌ஷர் படேல் - 39

ஸ்டப்ஸ் -31

அசுதோஷ் சர்மா - 37

விப்ராஜ் நிகம்- 0

டோனவன் ஃபெரோரா - 1

மிட்செல் ஸ்டார்க் - 2*

குல்தீப் யாதவ் - 4*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com