

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 154 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வதோதராவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் விளையாடியது.
நாட் ஷிவர் பிரண்ட் அரைசதம்; 155 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக நாட் ஷிவர் பிரண்ட் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 33 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். மற்ற வீராங்கனைகள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.
தில்லி கேபிடல்ஸ் தரப்பில் ஸ்ரீ சரணி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மாரிஸேன் காப் மற்றும் நந்தினி சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.