ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக இந்திய மகளிரணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் வருகிற ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 27 இடைவெளியில் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் டர்பன், ஜோஹன்ஸ்பர்க் மற்றும் பெனோனி ஆகிய இடங்களில் நடத்தப்படவுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகளும் டர்பனில் நடத்தப்படவுள்ளது. முதல் டி20 போட்டி ஏப்ரல் 17 ஆம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஏப்ரல் 19 ஆம் தேதியும் நடத்தப்படுகிறது.
மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகள் ஜோஹன்ஸ்பர்க்கில் நடத்தப்படுகிறது. மூன்றாவது போட்டி ஏப்ரல் 22 ஆம் தேதியும், ஏப்ரல் 25 தேதியும் நடத்தப்படுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெனோனியில் வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி நடத்தப்படுகிறது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பை டி20 தொடருக்கு முன்பாக தென்னாப்பிரிக்கா விளையாடும் கடைசி டி20 தொடர் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.