சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

டாஸ் வென்று தில்லி பந்துவீச்சு: தாக்குப் பிடிக்குமா லக்னௌ?

லக்னௌவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2025, 1:46 pm

DIN

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர் லீக் சுற்றின் 40-வது போட்டியில் தில்லி மற்றும் லக்னௌ அணிகள் விளையாடுகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவின் எக்கானா திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்டன் அக்‌ஷர் பட்டேல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

தில்லி அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பந்த் லக்னௌ அணியிலும், லக்னௌவின் முன்னாள் கேப்டன் கே.எல். ராகுல் தில்லி அணியிலும் விளையாடுவதால் இந்தப் போட்டி மேலும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லக்னௌ அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதேவேளையில் தில்லி அணியில் இலங்கை வீரர் துஷ்மந்த சமீரா சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு அணியிலும் பலம் வாய்ந்த அதிரடி ஆட்டக்காரர்களும், வேகப்பந்துவீச்சாளர்களும் இருப்பதால் இந்தப் போட்டியில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நல்ல ரன் ரேட்டில் வெற்றிபெறும் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது.

லக்னௌ அணியில் மார்க்ரம், பூரன், மார்ஷ், பந்த் உள்ளிட்ட அதிரடி ஆட்டக்காரர்கள் ஒருபுறமிருக்க, தில்லி அணியிலும் கே.எல்.ராகுல், அஷுதோஷ் சர்மா, கருண் நாயர் உள்ளிட்டோரும் உள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 

எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த், அப்துல் சமத், டேவிட் மில்லர், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் சிங் ரதி, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், பிரின்ஸ் யாதவ்

தில்லி கேபிடல்ஸ் 

அபிஷேக் போரல், கருண் நாயர், கே.எல். ராகுல், அக்‌ஷர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், துஷ்மந்த சமீரா, முகேஷ் குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.