மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image

படம் | மும்பை இந்தியன்ஸ் (எக்ஸ்)

Updated On :1 ஜூன் 2025, 1:38 pm

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (ஜூன் 1) நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்கிறது.

மும்பை அணியின் பிளேயிங் லெவனில் கிளீசனுக்குப் பதிலாக ரீஸ் டாப்ளே சேர்க்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸின் பிளேயிங் லெவனில் யுஸ்வேந்திர சஹால் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.