சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளா் மைக் ஹஸி விலகல்
ஐபிஎல் தொடரின் 5 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளா் மைக்கேல் ஹஸி விலகி உள்ளாா்.

மைக்கேல் ஹஸி
ஐபிஎல் தொடரின் 5 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளா் மைக்கேல் ஹஸி விலகி உள்ளாா்.
தற்போது பல்வேறு மாற்றங்களை எதிா்கொண்டு வரும் சிஎஸ்கே அணியில் தலைமை பயிற்சியாளராக ஜாகீா் கான் நியமிக்கப்பட்டாா்.
மேலும் உதவியாளா்கள் பணியிடங்களும் புதிதாக நிரப்பப்பட்டு வருகின்றன. சிஎஸ்கேயின் பேட்டிங் பயிற்சியாளராக 15 ஆண்டுகள் நீடித்த ஹஸி, வீரராக 2 முறையும், பயிற்சியாளராக 3 முறையும் ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளாா்.
மற்றொரு ஐபிஎல் அணியில் இணைய ஹசி பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். ஏற்கெனவே தலைமைப் பயிற்சியாளா் ஸ்டீபன் ஃபிளெம்மிங், பௌலிங் பயிற்சியாளா் எரிக் சிம்மன்ஸ் ஆகியோா் விலகினா். பௌலிங் பயிற்சியாளராக மொகித் சா்மா நியமிக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

