ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மீண்டும் மீண்டுமா? ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம்!

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு விதித்த அபராதம் குறித்து...

News image

ஹார்திக் பாண்டியா - படம்: பிடிஐ

Updated On :30 மார்ச் 2025, 12:28 pm IST

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்று இரவு (மார்ச்.29) அஹமதாபாத்தில் மோதியது.

இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 196 ரன்கள் அடிக்க அடுத்து விளையாடிய மும்பை 160/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற மும்பை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி அபராதம்

இந்தப் போட்டியில் குறிப்பிட்ட நேரத்தைவிட மெதுவாக பந்துவீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சீசனிலும் இதுபோல் பலமுறை அபராதம் விதிக்கப்பட்டன. அதனால், இந்த சீசனில் முதல் போட்டியில் ஹார்திக் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் கேப்டனை அணியிலிருந்து நீக்கும் விதிமுறை இருந்தது. தற்போது, அபராதத்துடன் கேப்டனுக்கு ஒரு தகுதி புள்ளி குறைப்பு (டீ மெரிட் பாயிண்ட்) வழங்கப்பட்டது.

2 போட்டிகளிலும் தோல்வியுற்று மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.