Enable Javscript for better performance
சிஎஸ்கே சார்பில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு நிதியுதவி- Dinamani

சுடச்சுட

    

    சிஎஸ்கே சார்பில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு நிதியுதவி

    By Raghavendran  |   Published on : 24th March 2019 11:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    csk_ticket_proceeds_being_donated_to_the_CRPF

     

    2019-ஆம் ஆண்டு நடைபெறும் 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் சனிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 70 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து ஆடிய சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 

    இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முதல் லீக் போட்டியின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த ரூ.2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. 

    மேலும் ஐபிஎல் தொடக்க விழாவுக்கான செலவுத் தொகை ரூ.20 கோடியும் சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சிஆர்பிஎப் அதிகாரிகளிடம்  வழங்கினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai