ஒலிம்பிக்ஸ்: அரையிறுதியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியின் ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
ஒலிம்பிக்ஸ்: அரையிறுதியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வி
ஒலிம்பிக்ஸ்: அரையிறுதியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வி
Published on
Updated on
1 min read


டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியின் ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இந்திய - பெல்ஜியம் ஆடவர் ஹாக்கி அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா 2 - 5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் போராடி தோல்வியடைந்தது.

இந்திய ஹாக்கி வீரர்கள் ஹர்மன்ப்ரீத் சிங் (7வது நிமிடம்), மந்தீப் சிங் (8வது நிமிடம்) கோல் அடித்தனர்.  பெல்ஜியம் அணி வீரர் அலெக்ஸாண்டர் (19, 49, 53வது நிமிடங்களில்) 3 கோல்களை அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். அவருடன், லோயிக் (2வது நிமிடம்), ஜான்-ஜான் டோஹ்மென் (60வது நிமிடம்) தலா ஒரு கோல்களை அடித்து அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணி 5 - 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற வழிகோலினர்.

ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதவுள்ளது.

இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆஸ்திரேலியா - ஜெர்மனி ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடையும் அணியுடன், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் விளையாட உள்ளது.

41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றும், அரையிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் கனவு நிறைவேறாமலேயே போனது. எனினும், ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.