மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இன்னும் ஆறு நாள் மீதமிருக்க, ரியோ ஒலிம்பிக்ஸை விடவும் அதிக தங்கம் வாங்கியுள்ள சீனா

டோக்கியோவில் தங்க வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் சீன வீரர்கள். 

News image
பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற சீன வீரர் ஷி ஸியோங்
Updated On :3 ஆகஸ்ட் 2021, 6:59 am

DIN

ரியோ ஒலிம்பிக் போட்டியில் சீன அணி 26 தங்கம் வென்று பதக்கப் பட்டியலில் 3-ம் இடம் பிடித்தது. இந்தமுறை டோக்கியோவில் தங்க வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் சீன வீரர்கள். 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகிறது. அதிக தங்கங்கள், அதிகப் பதக்கங்களைப் பெறுவதில் வழக்கமாக அமெரிக்கா, சீனா இங்கிலாந்து ஆகிய நாடுகள் இடையே அதிகப் போட்டி ஏற்படும். 2012, 2016 ஆகிய இரு ஒலிம்பிக்ஸிலும் தலா 46 தங்கப் பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. எனினும் 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் 48 தங்கங்களுடன் சீனா முதலிடம் பிடித்தது. 

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சீன வீரர்கள் அசத்திக்கொண்டிருக்கிறார்கள். நேற்று மட்டும் ஒரே நாளில் சீனாவுக்கு 5 தங்கம் கிடைத்தது. இதனால் பதக்கப் பட்டியலில் அமெரிக்காவை விடவும் 7 தங்கம் அதிகம் பெற்று (இன்று மதியம் 12 மணி நிலவரப்படி) முதலிடத்தில் உள்ளது சீனா. 

இதுவரை 29 தங்கத்தை வென்றுள்ளது சீனா. ஒலிம்பிக் போட்டி முடிய இன்னும் ஆறு நாள்கள் மீதமிருக்கும் நிலையில் அதற்குள் ரியோ ஒலிம்பிக்ஸில் பெற்றதை விடவும் அதிக தங்கம் வென்றுள்ளது. அடுத்த ஆறு நாள்களில் இன்னும் அதிக தங்கத்தை சீன வீரர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 48 தங்கங்களை வென்றது சீனா. அந்தச் சாதனையை டோக்கியோவில் சீன வீரர்கள் முறியடிப்பார்களா என்பது இனிமேல் தான் தெரியும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.