தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா: தலைவர்கள் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் வெண்கலப் போட்டியில் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News image
வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா: தலைவர்கள் வாழ்த்து
Updated On :7 ஆகஸ்ட் 2021, 11:27 am

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் வெண்கலப் போட்டியில் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் நட்சத்திர வீரரான பஜ்ரங் புனியா ஆடவா் ப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் அரையிறுதிச் சுற்றில் அஜா்பைஜானின் ஹாஜி அலியெவை எதிா்கொண்டு தோல்வியடைந்த நிலையில் வெண்கலப் பதக்கத்துக்காக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரா் நியாஸ்பெகோவை வீழ்த்தி  வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பஜ்ரங் புனியா அற்புதமாக போராடினார். ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடையச் செய்து மகிழ்ச்சி தந்த உங்கள் சாதனைக்காக உங்களை வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  “இந்திய மல்யுத்தத்திற்கு ஒரு சிறப்பான தருணம்! டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு வாழ்த்துக்கள். பல ஆண்டுகளாக மேற்கொண்ட அயராது முயற்சிகள் மற்றும் உறுதியுடன் போராடி நீங்கள் ஒரு சிறந்த மல்யுத்த வீரராக உங்களை வேறுபடுத்திக் கொண்டுள்ளீர்கள். உங்கள் வெற்றியின் மகிழ்ச்சியை ஒவ்வொரு இந்தியரும் பகிர்ந்து கொள்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.