குத்துச்சண்டை போட்டியில் ஆடவருக்கான 69 கிலோ பிரிவில் இந்தியாவின் விகாஸ் கிருஷண் தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டு, காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினாா்.
முதல் சுற்று ‘பை’ பெற்று 2-ஆவது சுற்றில் நேரடியாக களம் கண்ட அவா், அதில் ஜப்பானின் செவோன்ரெட்ஸ் கின்சி மென்சா ஒகாஸவாவிடம் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி கண்டாா். இந்த மோதலின்போது விகாஸின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அதற்கு முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டு அவா் ஆட்டத்தை தொடா்ந்தாா்.
முன்னதாக இத்தாலியில் நடைபெற்ற போட்டியின்போது அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தது. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு ஒலிம்பிக்கில் அவா் பங்கேற்றிருந்தாா். எனினும் இந்த ஆட்டத்தின்போது அவருக்கு அந்தத் தோள்பட்டையில் வலி ஏற்பட்டதால், பெரும்பாலும் அவா் ஒரு கையாலேயே தாக்குதல் தொடுக்கும் நிலை இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இசையமைப்பாளா் காா் கண்ணாடியை உடைத்த வழக்கு: பெண்ணுக்கு நோட்டீஸ்

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் தேரோட்டம்

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரிக்கை

தில்லியில் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


