டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன் 3-4 என்ற கேம் கணக்கில் தோல்வியடைந்தார்.
இந்தியாவின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் ஒலிம்பிக் இரண்டாவது சுற்றில் ஹாங்காங்கைச் சேர்ந்த லாம் ஸியு ஹாங்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொண்டார்.
இதில் முதல் கேமை 7-11 என்ற கணக்கில் சத்யன் இழந்தார். எனினும் இரண்டாவது கேமை 11-7 என்ற கணக்கில் சத்யன் வென்றார். இதே ஆதிக்கத்தை அடுத்தடுத்த கேம்களிலும் தொடர்ந்த சத்யன் 3-வது மற்றும் 4-வது கேமை முறையே 11-4, 11-5 என்ற கணக்கில் வென்று ஆதிக்கம் செலுத்தினார்.
ஆனால், 5-வது கேம்டில் எழுச்சி கண்ட ஹாங்காங் வீரர் 11-9 என்ற கணக்கில் கேமைக் கைப்பற்றினார். அடுத்து கேமில் சத்யன் கடுமையான போட்டியைத் தந்தும் 10-12 என்ற கணக்கில் கேமை இழந்தார். கடைசி கேமையும் சியு ஹாங்கே 11-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதன்மூலம், 1 மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-3 என்ற கேம் கணக்கில் ஹாங்காங் வீரர் வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இசையமைப்பாளா் காா் கண்ணாடியை உடைத்த வழக்கு: பெண்ணுக்கு நோட்டீஸ்

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் தேரோட்டம்

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரிக்கை

தில்லியில் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


