ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா தோல்வி

இந்தியாவை 2-1 என ஆர்ஜென்டீனா வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை 2-1 என ஆர்ஜென்டீனா வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்திய மகளிா் ஹாக்கி அணி தனது காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதிபெற்றது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி.

இன்று நடைபெற்ற ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 2-வது நிமிடத்திலேயே கோலடித்து அசத்தியது இந்திய மகளிர் அணி. பெனால்டி கார்னரில் குர்ஜித் கெளர் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பகுதியில் இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 

2-வது பகுதியின் தொடக்கத்தில் பெனால்டி கார்னர் மூலமாக ஆர்ஜென்டீனா கோலடித்தது. இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. 

முதல் பாதியின் இறுதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமனில் இருந்தன. 3-ம் பகுதியில் மேலும் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது ஆர்ஜென்டீனா. இறுதியில் 2-1 என இந்தியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com