கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் புகைப்படங்கள்
By DIN | Published On : 07th August 2021 03:48 PM | Last Updated : 07th August 2021 03:48 PM | அ+அ அ- |

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கோல்ப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக், 4-ம் இடம் பிடித்து நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டார். இன்று நடைபெற்ற கோல்ப் போட்டியில் அதிதி அசோக், பதக்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. நேற்றைய ஆட்டத்தின் முடிவில் அவர் 2-ம் இடத்தில் இருந்தார். இந்நிலையில் போட்டியின் முடிவில் 4-ம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை அதிதி அசோக் தவறவிட்டார்.
இதையும் படிக்க | ஒலிம்பிக்ஸ் 4*400 தொடர் ஓட்டத்தில் ஆசிய சாதனை நிகழ்த்திய இந்திய வீரர்கள்: விடியோ
ரியோ ஒலிம்பிக்ஸில் 41-வது இடம் பெற்ற 23 வயது அதிதி, இம்முறை தொடர்ந்து முன்னிலை பெற்று இந்திய விளையாட்டு ரசிகர்களிடம் கோல்ப் விளையாட்டின் மீதான கவனத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் பலருடைய பாராட்டுகளையும் அவர் பெற்றுள்ளார்.