புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஒலிம்பிக்ஸ் 4*400 தொடர் ஓட்டத்தில் ஆசிய சாதனை நிகழ்த்திய இந்திய வீரர்கள்: விடியோ

தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், முகமது அனாஸ், நிர்மல், அமோஜ் ஜேகப் பங்கேற்றார்கள்.

News image
படம்: யூடியூப்
Updated On :7 ஆகஸ்ட் 2021, 9:18 am

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 4*400 தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தகுதிச்சுற்றில் 9-வது இடம் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது. 

இன்று நடைபெற்ற 4*400 தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பாக முகமது அனாஸ், நிர்மல், தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், அமோஜ் ஜேகப் பங்கேற்றார்கள். தகுதிச்சுற்றில் தங்களது பிரிவில் இந்திய அணி 3:00:25 நிமிடங்களில் தூரத்தைக் கடந்து 4-ம் இடம் பிடித்தது. ஆசிய அளவில் குறைந்த நேரத்தில் தூரத்தைக் கடந்து இந்திய வீரர்கள் அசத்தினார்கள். எனினும் தகுதிச்சுற்றின் முடிவில் இந்திய அணிக்கு 9-வது இடம் கிடைத்ததால் தோல்வியடைய நேர்ந்தது. முதல் 8 இடங்களைப் பிடித்த நாடுகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றன. இதனால் இந்திய அணிக்கு நூலிழையில் இறுதிச்சுற்று வாய்ப்பு பறிபோனது. 

இந்திய அணி வீரர்கள் தூரத்தைக் கடந்ததன் விவரம்

அனாஸ் -  45.6 நொடிகள்
நிர்மல் - 45.0 நொடிகள்
ஆரோக்கிய ராஜீவ் - 44.84 நொடிகள்
அமோஜ் ஜேகப் - 44.68 நொடிகள்

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.