ஒலிம்பிக் வீரர்கள் புதிய இந்தியாவின் பிரதிநிதிகள்: அனுராக் தாக்குர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் புதிய இந்தியாவின் பிரதிநிதிகளாக பங்கேற்றதாக விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். 
ஒலிம்பிக் வீரர்கள் புதிய இந்தியாவின் பிரதிநிதிகள்: அனுராக் தாக்குர்


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் புதிய இந்தியாவின் பிரதிநிதிகளாக பங்கேற்றதாக விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். 

மேலும் புதிய இந்தியாவின் புதிய நாயகர்களாக அவர்கள் உருவாகியுள்ளதாகவும் விளையாட்டு வீரர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டினார். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் இன்று (ஆக. 9) நாடு திரும்பினர்.

தில்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு பொதுமக்கள் சூழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் மத்திய அரசு சார்பில் விளையாட்டு வீரர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, தீபக் புனியா, நீரஜ் சோப்ரா, லவ்லினா போா்கோஹெய்ன், ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள், மகளின் ஹாக்கி அணி வீராங்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் அமைச்சர் அனுராக் தாக்குர் பேசியதாவது, நீரஜ் சோப்ரா, பஜ்ரங் புனியா, லவ்லினா போன்ற விளையாட்டு வீரர்கள் புதிய இந்தியாவின் பிரதிநிதிகளாக போட்டிகளில் பங்கேற்றனர்.

அவர்கள் புதிய இந்தியாவின் புதிய நாயகர்கள். விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் தேவையான அனைத்து வசதிகளையும் விளையாட்டுத் துறை செய்து கொடுக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com