ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தங்கம் வென்ற வீராங்கனையிடம் காதலை வெளிப்படுத்திய சகவீரர்!

பாட்மின்டனில் தங்கம் வென்ற வீராங்கனையிடம் ஒலிம்பிக் மேடையிலேயே காதலை வெளிப்படுத்திய சக வீரர்.

News image

சீன வீராங்கனை யா கியூயாங் ஹுஆங்-கிடம் காதலை வெளிப்படுத்தும் லியூ யூசென் - படம் : எக்ஸ்

Updated On :4 ஆகஸ்ட் 2024, 3:39 pm

பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன பாட்மின்டன் வீராங்கனையிடம் சகவீரர் தனது காதலை வெளிப்படுத்திய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் சீனாவின் யா கியூயாங் ஹுஆங் – செங் சிவெய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சீன ஜோடி கொரிய ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. தங்கப் பதக்கத்தை வென்ற உற்சாகத்தில் இருந்த சீன வீராங்கனை யா கியூயாங்கிற்கு மற்றொரு ஒலிம்பிக் மேடையிலேயே மற்றொரு இனிப்பான சம்பவமும் அரங்கேறியது.

தங்கம் வென்ற உற்சாகத்தில் இருந்த யா கியூயாங்கிடம் அவருடன் இத்தொடரில் பங்கேற்றுள்ள சக வீரரான லியூ யூசென் தனது காதலை வெளிப்படுத்தினார். பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு வெற்றிக்களிப்பில் இருந்தவரிடம், மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தி, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மோதிரத்தை நீட்டினார்.

இதனை சற்றும் எதிர்பாராத, யா கியூயாங் ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார். அவரின் காதலை ஏற்றுக்கொள்வதை குறிப்பிடும் வகையில், மோதிரத்தை அணிந்துவிடுமாறு தனது விரல்களை நீட்டினார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

லியூ யூசென்னின் காதலை ஏற்றுக்கொண்ட யா கியூயாங்

லியூ யூசென்னின் காதலை ஏற்றுக்கொண்ட யா கியூயாங் - படம்: எக்ஸ்

தனது காதலி பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையோடு காத்திருந்து, தனது காதலை லியூ யூசென் வெளிப்படுத்தியுள்ளதாக சமூக வலைதளத்தில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியூ யூசென் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.