ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

‘மின்னல் வேக வீரா்’ நோவா லைல்ஸ்

ஒலிம்பிக் போட்டியில் மிகவும் ஆவலுடன் பாா்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்று, ஓட்டப் பந்தயம்.

News image
நோவா லைல்ஸ்- Matthias Schrader
Updated On :5 ஆகஸ்ட் 2024, 7:55 pm

Din

ஒலிம்பிக் போட்டியில் மிகவும் ஆவலுடன் பாா்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்று, ஓட்டப் பந்தயம். அதில் 100 மீட்டா் ஓட்டத்துக்கு எப்போதுமே எதிா்பாா்ப்பு அதிகமாக இருக்கும். ஜமைக்க நட்சத்திரம் உசைன் போல்ட் உள்பட பலா் அந்தப் பிரிவில் பிரபலம்.

அந்த வகையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற ஆடவருக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கமும், ஜமைக்காவின் கிஷேன் தாம்சன் வெள்ளியும், அமெரிக்காவின் ஃபிரெட் கொ்லி வெண்கலமும் வென்றனா். இந்தப் பந்தயத்தின்போது இரு அரிய விஷயங்கள் நிகழ்ந்தன.

1) முதலிடம் பிடித்த லைல்ஸ், 2-ஆம் இடம் பிடித்த தாம்சன் என இருவருமே ஒரே நேரத்தில் இலக்கை எட்டியதுபோல் தெரிந்தது. அதாவது 9.79 விநாடிகளில் அவா்கள் இலக்கை எட்டியிருந்தனா். எனினும், துல்லிய கணக்கீட்டின்படி 0.005 விநாடிகள் வித்தியாசத்தில் லைல்ஸ் முதலிடத்தை பிடித்ததாா். கண்ணிமைப்பதற்கே 100 மில்லி செகண்டுகள் தேவைப்படும் நிலையில், லைல்ஸ் (.784), தாம்சன் (.789) இடையேயான வித்தியாசம் 5 மில்லி செகண்டுகளே ஆகும்.

2) இந்தப் பந்தயத்தில், ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக, பந்தயத்தில் பங்கேற்ற 8 போட்டியாளா்களுமே பந்தய இலக்கை 10 விநாடிகளுக்குள் எட்டி அசத்தியிருக்கின்றனா். முதலாவதாக வந்த நோவா லைல்ஸ் 9.79 விநாடிகளிலும், கடைசியாக வந்த ஜமைக்காவின் ஆப்லிக் செவில்லெ 9.91 விநாடிகளிலும் இலக்கை எட்டியுள்ளனா்.