மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மனு பாக்கர் பயிற்சிக்கு அரசு செலவிட்ட தொகை எவ்வளவு?

இந்திய வீராங்கனை மனு பாக்கர் 221.7 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

News image
பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் மனு பாக்கர்- படம்: எக்ஸ்
Updated On :29 ஜூலை 2024, 12:15 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு அரசு செலவிட்ட தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 221.7 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் 12 ஆண்டுகால காத்திருப்புக்கு விடைகிடைத்துள்ளது. மேலும், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் மனு பாக்கர் படைத்துள்ளார். இதனால் மனு பாக்கரின் வெற்றி சிறப்பு வாய்ந்ததாகவே அமைந்துள்ளது.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர்

மனு பாக்கரின் வெற்றிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மனு பாக்கருக்கு வாழ்த்து தெரிவித்து, செய்தியாளர்களை இன்று (ஜூலை 29) சந்தித்தார். அப்போது அவரின் கடின உழைப்பு மற்றும் பயிற்சிக்கு ஆன செலவினங்கள் குறித்துப் பேசினார்.

மனு பாக்கர்

மனு பாக்கர்

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மன்சுக் மாண்டவியா, ''பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கம் வென்றதன் மூலம் மனு பாக்கர், இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளார்

அவருடன் பேசும்போது, கேலோ இந்தியா திட்டத்தின் அங்கமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியால் கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் நாட்டில் விளையாட்டுப் போட்டிகள் அதிகரித்தன. பள்ளிகள், கல்லூரிகள் அளவில் விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. வீரர்காள் பொருளாதார ரீதியாக எந்தவொரு சிரமத்தையும் சந்திக்காத வகையில், ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன எனக் குறிப்பிட்டார்.

மனு பாக்கரின் பயிற்சி குறித்து பேசிய அவர், மனு பாக்கர் பயிற்சிக்கு ரூ.2 கோடி வரை செலவிடப்பட்டது. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகளில் பயிற்சி பெற அனுப்பப்பட்டார். அவருக்குத் தேவையான, விருப்பப்பட்ட பயிற்சியாளரிடம் பயிற்சி பெற தேவையான பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டன. இதனை அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி வருகிறோம். இதன்மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் வீரர்கள் சிறந்த பங்களிப்பை அளிக்கின்றனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் நமது வீரர், வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நம் விளையாட்டு வீரர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் சீர்ஸ்ஃபார் பாரத் என்று பதிவிட்டு அவர்களை உற்சாகப்படுத்துங்கள்'' என மாண்டவியா குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.