இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா திங்கள்கிழமை (இன்று) திருமணம் செய்துகொண்டனர்.
கடந்த 2013-ம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவர்களுக்குள்ளான நட்பு வெளிப்பட்டது. பின்னர் இது காதலாக மாறியதாக தகவல்கள் கசிந்தாலும் அதனை இருவரும் தொடர்ந்து மறுத்து வந்தனர்.
ஆனாலும் விராட் கோலியின் சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அடிக்கடி வெளியானது. 2015-ம் ஆண்டு இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்ததாகவும் இதனால் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து விராட் கோலியின் ரசிகர்கள் அனுஷ்காவை சமூக வலைதள பக்கத்தில் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அதற்கு, அனுஷ்கா ஒரு சிறந்த பெண் அவரை எனது ரசிகர்களாக இருந்தால் இதுபோன்று செய்ய வேண்டாம் என விராட் கோலி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. பின்னர் நடந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் இருவரிடையிலான நட்பு மலர்ந்தது.
இந்நிலையில், விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடி டிசம்பர் 11-ந் தேதி திங்கள்கிழமை இத்தாலியில் உள்ள டஸ்கனி என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பிபியானோ என்ற தனியார் சொகுசு விடுதியில் திருமணம் செய்துகொண்டனர்.
அதுமட்டுமல்லாமல், சமூக வலைதள பக்கங்களில் விருக்ஷா என்ற ஹாஷ்டாக்குடன் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா ஜோடிக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
இதில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 100-க்கும் குறைவான நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து டிசம்பர் இறுதியில் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


