/

மும்பை vs தில்லி: முதல் வெற்றியை அடையவுள்ள அணி எது?

தில்லி, மும்பை ஆகிய இரு அணிகளும் இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளன...

News image
Updated On :14 ஏப்ரல் 2018, 10:45 am

எழில்

மும்பையில் நடைபெற்று வரும் மும்பை - தில்லி இடையிலான ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

மும்பை அணியில் பென் கட்டிங்குக்குப் பதிலாக இலங்கையின் அகிலா தனஞ்ஜெயா ஐபிஎல்-லில் அறிமுகமாகியுள்ளார். பிரதீப் சங்வானுக்குப் பதிலாக ஹார்திக் பாண்டியா அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல தில்லி அணியில் மோரிஸ், மன்ரோவுக்குப் பதிலாக ஜேஸன் ராய், டேன் கிறிஸ்டியன் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளார்கள். ஜேசன் ராய்க்கும் இது முதல் ஐபிஎல் ஆட்டம்.

தில்லி, மும்பை ஆகிய இரு அணிகளும் இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளன. இதனால் இரண்டு அணிகளில் ஓர் அணி இன்று தனது முதல் வெற்றியை அடையவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.