ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தியது.
தில்லியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுக்கு வீழ்ந்தது.
கடந்த மூன்று ஐபிஎல் போட்டிகளிலும் இருமுறை எட்டாவது இடங்களையும் ஒருமுறை ஐந்தாவது இடத்தைப் பெற்ற பஞ்சாப் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நேற்றைய வெற்றியின் மூலம் சென்னையைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பந்துவீச்சாளராக இதுவரை ஐபிஎல்-லில் பெயர் பெற்ற அஸ்வின், கேப்டனாகவும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் டெல்லி பேட்டிங் செய்தபோது பவர்பிளேயில் வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திய கேப்டன் அஸ்வின், அதன்பின்பு கடைசி ஓவரில் முஜீப் உர் ரஹ்மானை வீசச் செய்து வெற்றியைக் கண்டுள்ளார். இதனால் அஸ்வினின் தலைமைப் பண்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் கிடைத்துள்ளன. பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவதில் அஸ்வின் மிகவும் கூர்மையான அறிவுடன் செயல்படுவதாக நிபுணர்கள் பாராட்டுகிறார்கள்.
ஆறு ஆட்டங்களில் ஐந்து வெற்றிகளைப் பெற்றுள்ளதால் பஞ்சாப் அணி நிச்சயம் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


