கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம்: பந்துவீச்சைத் தேர்வு செய்தார் அஸ்வின்!
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்...


இந்தூரில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. மும்பைக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா படுதோல்வியைத் தழுவியது. அதே நேரத்தில் ராஜஸ்தானிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி அடைந்தது. புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் பஞ்சாப் 3-ம் இடத்திலும் 10 புள்ளிகளுடன் கொல்கத்தா 5-ம் இடத்திலும் உள்ளன. இதனால் இரு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற முனைப்புடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மயங்க் அகர்வால், ஃபிஞ்ச் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள். திவாரிக்குப் பதிலாக ஸ்ரண் தேர்வாகியுள்ளார்.
கொல்கத்தா அணியில் டாம் கரனுக்குப் பதிலாக ஜவோன் சியர்லெஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரிங்கு சிங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சுப்மன் கில் தேர்வாகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...