குர்கான் மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டி: இந்தியாவின் இளம் வீராங்கனை அதிதி அசோக் 'சாம்பியன்' !
குர்காவ்னில் நடந்த சர்வதேச மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில் 18 வயதேயான இளம் இந்திய வீராங்கனை அதிதி அசோக் 'சாம்பியன்' பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.


குர்கான்: குர்காவ்னில் நடந்த சர்வதேச மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில் 18 வயதேயான இளம் இந்திய வீராங்கனை அதிதி அசோக் 'சாம்பியன்' பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தில்லியை அடுத்துள்ள குர்கானில் ஹீரோ ஹோண்டா மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டிகள் நடைபெற்று வந்தன. பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கு கொண்ட இந்த போட்டித் தொடரில், இந்தியாவின் சார்பாக இளம் வீராங்கனை அதிதி அசோக் பங்கெடுத்திருந்தார்.
பல கட்டமாக நடந்த இந்த போட்டியில் 18 வயதேயான பெங்களூரைச் சேர்ந்த அதிதி அசோக் 'சாம்பியன்' பட்டம் வென்று சாதனை படைந்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டி ஒன்றில் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
அதிதி அசோக் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டார். பதக்கம் பெற்று வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பதக்கத்தை தவறிவிட்டார். ஆனால் அதை எல்லாம் மிஞ்சும் விதமாக தற்போது மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில் சாம்பியன் பட்டம் சென்று சரித்திர சாதனையை அதிதி படைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...