விசாகப்பட்டினம்: இந்திய -இங்கிலாந்து அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வெற்றி பெற இந்தியா 405 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆட்டத்தின் நான்காம் நாளான இன்று 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் இந்தியா தனது ஆட்டத்தை தொடர்ந்தது. ரஹானே 26, கோஹ்லி 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 77 ரன்களை குவித்தனர். மற்றவர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் இறுதி நேரத்தில் ஜெயந்த் யாதவ் 27 ரன்கள் எடுத்தது இந்தியாவுக்கு பேருதவியாக இருந்தது.
இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட், அதில் ரஷீத் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
எனவே முதல் இன்னிங்சில் இந்தியா கூடுதலாக பெற்ற ரன்களையும் சேர்த்து இங்கிலாந்துக்கு 405 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்திய மண்ணில் இதுவரை எந்த அணியும் 405 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக 387 ரன்கள்தான் சேஸ் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் அறிவிப்பு
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்: மு.க. ஸ்டாலின்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பசுமை எரிசக்தி நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
தோல்வியடைந்த அமித் ஷா பதவி விலக வேண்டும்: சிஜேபி நிறுவனர் அபிஜீத்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



