ஐ.பி.எல்லா? சாம்பியன்ஸ் லீக்கா? குழப்பத்தில் பிசிசிஐ!

நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவதானால்,  ஐ.பி.எல் அல்லது சாம்பியன்ஸ் லீக் ஆகிய இரண்டில் ஏதாவது  ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டி உள்ளதால் பிசிசிஐ கடும் குழப்பத்தில் உள்ளது
ஐ.பி.எல்லா? சாம்பியன்ஸ் லீக்கா? குழப்பத்தில் பிசிசிஐ!

கொல்கத்தா:  நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவதானால்,  ஐ.பி.எல் அல்லது சாம்பியன்ஸ் லீக் ஆகிய இரண்டில் ஏதாவது  ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டி உள்ளதால் பிசிசிஐ கடும் குழப்பத்தில் உள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரிய (பிசிசிஐ) செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவதற்காக , ஒய்வு பெற்ற  நீதிபதி லோதா தலைமையிலான குழு ஒன்று உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில்  அமைக்கப்பட்டது.இந்த குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் பிசிசிஐக்கு உத்தரவிட்டது.ஆனால் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை  நிறைவேற்றுவது  என்பது  இயலாது என்று பிசிசிஐ மறுத்துவிட்டது.மேலும் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் இந்திய-  நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இடையே, பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார்,. அப்போது அவர் கூறியதாவது:

நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதாக இருந்தால் நாம் ஐபிஎல் அல்லது சாம்பியன்ஸ் லீக் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்து விளையாட வேண்டியிருக்கும். ஏன் என்றால் குழுவின் பரிந்துரைகளின் படி, ஐபிஎல் போட்டிகளுக்கும் உள்நாட்டு போட்டிகளுக்கும் இடையே 15 நாட்கள் இடைவெளி விட வேண்டியிருக்கும். ஐபிஎல்லுக்கு முன்னதாக 2017,பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.அதே போல் ஐபிஎல் முடிந்த உடனேயே ஜூன் 2017-ல், சாம்பியன்ஸ் லீக் போட்டிகள்  நடக்க உள்ளது. எனவே நாங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டிய இக்கட்டில் உள்ளோம்.

இந்த விவகாரத்தில், என்ன நடக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com