காயமடைந்த ஸ்ரீகர் தவான்: மூன்றாவது டெஸ்டில் 'அவுட்'!
கை விரலில் காயம் அடைந்த துவக்க ஆட்டக்காரர் ஸ்ரீகர் தவான் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்ட என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.


கொல்கத்தா: கை விரலில் காயம் அடைந்த துவக்க ஆட்டக்காரர் ஸ்ரீகர் தவான் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் ட்ரென்ட் பவுல்ட் வீசிய பந்து தவானின் கையை பதம் பார்த்தது. மருத்துவ பரிசோதனையில்
கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. மருத்துவர்கள் அவர் 15 நாடுகள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே அவர் கான்பூரில் வரும் சனிக்கிழமை துவங்க உள்ள மூன்றாவது போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...