5-0: ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா படுதோல்வி!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5-0 என...
5-0: ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா படுதோல்வி!
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5-0 என ஒயிட்வாஷ் ஆகி தோல்வியடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

5-வது ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ருசோவ் 122 ரன்கள் குவித்தார். டுமினி 73 ரன்கள் எடுத்தார்.

ஏற்கெனவே 4 போட்டிகளிலும் தோல்வி கண்ட ஆஸ்திரேலியா இதில் வெற்றி பெற மிகவும் மெனக்கெட்டது. வார்னர் அபாரமாக ஆடி 173 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் அவுட் ஆனார். 48.2 ஓவர்களில் 296 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது ஆஸ்திரேலியா.

இதுவரை ஆஸ்திரேலிய அணி ஒருமுறை கூட 5-0 என்கிற கணக்கில் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததில்லை. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்துடன் உள்ளார்கள்.

அணியில் நிறைய இளைஞர்கள். எங்களுக்கு இது புதிய அனுபவம். இந்த அனுபவத்தைக் கொண்டு இனி இன்னும் சிறப்பாக விளையாடுவோம் என்று ஆஸி. கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com