தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரஞ்சி: தினேஷ் கார்த்திக் அதிரடி சதம்! வலுவான நிலையில் தமிழக அணி!

ரயில்வேக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி சதத்தால் தமிழக அணி வலுவான நிலையை அடைந்துள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2016, 12:21 pm

DIN

ரயில்வேக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி சதத்தால் தமிழக அணி வலுவான நிலையை அடைந்துள்ளது.

பிலாஸ்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தமிழகம் தனது முதல் இன்னிங்ஸில் 42.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ரங்கராஜன் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார். ரயில்வே தரப்பில் பன்சால் 4 விக்கெட்டுகளையும், மஞ்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ரயில்வே அணி 64 ஓவர்களில் 173 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தேவ்தார் 47 ரன்களும், அரிந்தாம் கோஷ் ஆட்டமிழக்காமல் 46 ரன்களும் எடுத்தனர். தமிழகம் தரப்பில் நடராஜன் 4 விக்கெட்டுகளையும், விக்னேஷ், ரங்கராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தமிழக அணி, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 60 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அபிநவ் முகுந்த் 98, காந்தி 41 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

109 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தது தமிழக அணி. முகுந்த் சதத்தைப் பூர்த்தி செய்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு களமிறங்கிய தினேஷ் கார்த்திக், கடந்தமுறை மோசமாக ஆடியதைச் சரிகட்டும் விதமாக அதிரடியாக ஆடினார். அவருடைய ஆட்டம், தமிழக அணிக்குச் சாதகமாக அமைந்தது. சிக்ஸ் அடிக்க முயலாமல் தொடர்ந்து பவுண்டரிகளாக அடித்தார் தினேஷ் கார்த்திக். 82 பந்துகளில் சதத்தை எட்டினார். முதல்தர கிரிக்கெட்டில், அவருடைய 25-வது சதமாகும். தினேஷுக்கு நல்ல இணையாக விளங்கினார் இந்திரஜித்.  

கடைசியில், 145 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 163 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் தினேஷ் கார்த்திக். இந்திரஜித், மலோலன் ரங்கராஜன் ஆகியோர் அரை சதம் எடுத்தார்கள். 

தமிழக அணி, 132 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 452 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. ரயில்வே அணிக்கு 401 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கடினமான இலக்கு என்பதால் ரயில்வே அணி வீரர்கள் தடுமாறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்க வீரர்களான செளரப் மற்றும் சிவாகந்த் சுக்லா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். 

மூன்றாம்நாள் ஆட்ட நேர முடிவில் ரயில்வே அணி, 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 108 ரன்கள் எடுத்துள்ளது. செளரப் 54, சுக்லா 52 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ரயில்வே அணி வெற்றிபெற 293 ரன்கள் இன்னும் தேவைப்படுகிறது. இதனால் கடைசி நாள் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.